Skip to main content

நந்த மகா-சமுத்திரம்! நாகர் (லெ-மெளரிய பேரரசு) இன்று...

 
*கடவுளை பற்றி காமராசர்* நீங்க *பல தெய்வ*வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே, *தெய்வ* வழி
பாட்டையே வெறுக்கிறீங்களா? என்று கேட்டேன்

அவர் கொஞ்சம் கூடத் தாமதிக்காமல் “லட்சுமி, சரசுவதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்திங்கிறதெல்லாம் யாரோ ஓவியர்கள் வரைஞ்சி வச்ச *சித்திரங்கள்*. அதையெல்லாம் ஆண்டவன்னு நம்மாளு கும்பிட ஆரம் பிச்சிட்டான். 

சுடலைமாடன், காத்தவராயன்கிற பேர்ல அந்த வட்டாரத்துல யாராவது பிரபலமான ஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவு ளாக்கிட்டான் நம்மாளு. கடவுள்ங்கிறவரு கண்ண உருட்டிகிட்டு, நாக்கை நீட்டிகிட்டுதான் இருப்பாரா? 

அரேபியாவிலே இருக்கிறவன் *அல்லா* ன்னான், அதுல சன்னி, சியா, சுஃபி, பாகா என்று பல உட்பிரிவுகளையும் உருவாக்கி னான்,. *ஜெருசலத்தல* இருக்கிறவன் *கர்த்தர்* ன்னான், அதிலேயும் சிலபேரு *மேரியக்* கும்பிடாதேன்னான். கிறிஸ்தவ மதத்திலேயே ஏழு, எட்டு *உட்பிரிவுகளை* உண்டாக்கிட்டான். 

*மத்திய ஆசியா*விலிருந்து வந்தவன், அக்கினி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு *நூறு சாமியச்* சொன்னான். நம்ம நாட்டு பூர்வீகக் குடிமக்களான *திராவிடர்கள்* காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் வந்து இவன்கிட்டே ‘என் பேரு இதுதான்னு சொன்னான்?. 

அவனவனும் அவனவன் இஷ்டத்துக்கு ஒரு சாமிய உருவாக்கினான். ஒவ்வொரு வட்டாரத்துல உருவான ஒவ்வொரு மகானும் ஒரு கடவுள உண்டாக்கி, எல்லாரும் தன் கட்சியில சேரும்படியா செஞ்சான். சுருக்கமாக சொல்லனும்னா *காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் – தி . மு . க . மாதிரி ஒவ்வொரு மதமும் ஒரு கட்சி.* யார் யாருக்கு எதிலே *லாபமிருக்கோ* அதுல சேந்துக்குறான். 

மதம் மனிதனுக்குச் சோறு போடுமா?, அவன் கஷ்டங்களப் போக்குமா?. இந்தக் குறைந்த 
பட்ச அறிவுகூட வேண்டாமா மனுசனுக்கு? உலகத்துல இருக்கிற ஒவ்வொரு மதமும், நீ பெரிசா – நான் பெரிசான்னு மோதிகிட்டு ரத்தம் சிந்துதே!!! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே!!! இப்படியெல்லாம *அடிச்சிகிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?* 

தலைவர் தெளிந்த நீரோடை மாதிரி பேசிக் கொண்டே வந்தார். ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் ஒரு அழுத்தமான முடிவை அவர் வைத்திருப்பதைப் பார்த்து நான் வியந்தேன். 

*நீங்க சொல்றதப் பாத்தா ராமன் கிருஷ் ணனையெல்லாம் கடவுளாக்கிட்டானே, அதை ஏத்துக்கிறீங்க போலிருக்கே?* 
என்று வினாத் தொடுத்தேன். 

தலைவர் குலுங்கக் குலுங்கச் சிரித்தார். 
*டேய் கிறுக்கா, நான் சொல்றது ஒனக்கு விளங்கலியான்னேன்?* ராமன், கிருஷ் ணன்கிறது *கற்பனைக் கதாபாத்திரம் னேன்*. அதையெல்லாம் நம்மாளு கடவுளாக் கிட்டேன்னேன்!!!. 

இன்னிக்கு நம்ம சினிமாவுல வர்ற கதாநாயக னுக்குக் *கட்அவுட்* வைக்கிறானில்லையா, அது மாதிரி அந்தக் காலத்துல கதாநாயகன் மாதிரி வருணிக்கப்பட்ட ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் கோயில் கட்டிபுட்டான். அந்தப் *புத்தங்கள்ல சொல்லப்பட்டிருக்கிற விசயங்கள எடுத்துக்கணும், ஆசாமிய விட்டுபுடணும்*. 

காலப்போக்குல என்னாச்சுன்னா, லட்சக்கணக் கான மக்கள் ராமனை, கிருஷ்ணனைக் கும்பிட ஆரம்பிச்சிட்டான்னு தெரிஞ்சதும், அவுங்களை வச்சி *கட்சி கட்ட ஆரம்பிச்சிட்டான் அரசியல் வாதி.* அவனுக்குத் தெரியும் ராமன் ஆண்ட வன் இல்லேன்னு. ஆனா, அதை வச்சிப் பொழப்பு நடத்தப் பாக்குறானுங்க களவாணிப் பசங்க. 

புராணங்கள்லே சொல்லப்பட்டிருக்கிற கதா பாத்திரங்கள வச்சித்தான் நம்ம சனங்கள அடிமையா ஆக்கிவச்சிருக்கான். நரகாசுரன் கதையை வச்சி தீபாவளி கொண்டாடுறான், நவராத்திரி கதையைச் சொல்லி சரஸ்வதி பூசை பண்றான். விக்னேஸ்வரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை பண்றான். 

இது மாதிரி ஏற்பாடுகளை செஞ்சி ஏழை சனங்களையும், பாமர சனங்களையும் தன்னோட மதத்தின் பிடிக்குள்ளேயே வச்சிப் பொழப  நான் தீபாவளி கொண்டாடுனது 
மில்ல, எண்ணெய் தேச்சிக் குளிச்சதுமில்ல, புதுசு கட்டுனதுமில்ல. 

பொங்கல் மட்டும்தான் நம்ம பண்டிகைன்னேன். *நம்ம சமூகம் விவசாய சமூகம், அது நம்ம சலாச்சாரத்தோட ஒட்டுன விழான்னேன்* என்று விளக்கினார். *மதம் என்பதே மனிதனுக்கு அபின், அப்படிங்கிற கருத்து உங்களுக்கும் உடன்பாடுதான் போலத் தோணுதே?* என்று ஒரு கேள்வியைப் போட்டேன் . 

தலைவர், நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விசயமும் சமுதாயத்துக்குத் தேவையில்ல. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத் தாலி வச்சிப் படைக்க லாமா? 

*ஏழை* வீட்டுப் பெண்ணுக்கு ஒரு *தோடு , மூக்குத்திக்குக்* கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில *வைர* ஒட்டி யாணம் செஞ்சி *காளியாத்தா* இடுப்புக்குக் கட்டி விடறான். 

*கறுப்புப் பணம்* வச்சிருக்கிறவன *திருப் பதி* உண்டியல்ல கொண்டு போய்க் கொட் றான். அந்தக் *காசில ரோடு* போட்டுக் கொடுக்கலாம், ரெண்டு *பள்ளிக்கூடம்* 
கட்டிக் கொடுக்கலாமில்லையா?, அதையெல் லாம் செய்யமாட்டான்., *சாமிக்குத்தம்* வந்தி டும்னு பயந்துகிட்டு செய்வான். 

*மதம் மனிதனை பயமுறுத்தியே வைக்குதே 
தவிர, தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா?* படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன் என்றார். 

*கோவில் பிரார்த்தனை, நேர்த்திக்கடன் கழிக்கிறதுன்னு ஏதாவது நீங்க செஞ்ச அனுபவமுண்டா?* இதிலேருந்து எப்போ விலகுனீங்க?” என்று கேட்டேன்.

* சின்னப் பையனா இருந்தப்போ விருது நகர்லே *பத்ரகாளியம்மன்* கோயில் திரு
விழா நடக்கும். அந்தக் கோயில் சிலைக்கு 
ஒரு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 

1930-க்கு முன்னாலே *சஞ்சீவரெட்டியோட திருப்பதி* மலைக்குப் போனேன். அவர் *மொட்டை* போட்டுகிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டு கிட்டேன். அப்பொறம் யோசிச்சுப் பாத்தேன். 
இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணிச்சு. 

*போயும் போயும் கடவுள், தலை முடியத் தானா கேக்குறாரு?* எல்லாம் முடி வெட்டு ரவன் (Barber Shop ) தொழில் யுக்தின்னு சிந்திச்சேன், விட்டுட்டேன். ஆனா , சஞ்சீவ
ரெட்டி அதை விடலை. அடிக்கடி மொட்டை போடுவார். 

*தலையில இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பானுங்க ஆனா ஆண்டவனுக் காகத் தலையையே கேட்டா கொடுப்பானா?* என்று கேட்டுவிட்டு விழுந்து விழுந்து சிரித்தார். 

*அப்படியானா, மனிதர்களுக்கு வழிபாடு, பிரார்த்தனை முக்கியம்னு சொல்றாங்களே, அதப்பத்தி?* என்று கேட்டேன். 

*அடுத்த மனுசன் நல்லாருக்கணும்கிறது தான் வழிபாடு. ஏழைகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யணும்கிறதுதான் பிரார்த்தனை,* இதுல நாம சரியா இருந்தா, தெய்வம்னு ஒன்னு இருந்தா அது நம்ம வாழ்த்தும்னேன்!!! 

காமராசர் என்கிற அந்த *மனிதாபிமானி* என் மனத்தில் அந்த நிமிடமே சிம்மாசனம் போட்டு உட்காருகிறார். சட்டென்று காரை நிறுத்துகிறார். 

வழியில் காலில் செருப்போ, மேலுக்குச் சட்டை யோ இல்லாமல் நடந்து போன சிறுவர்களைப் பார்த்து *ஏன் பள்ளிக்கூடம் போகலியா?* என்கிறார். அவர் இவ்வளவு நேரம் பேசிய பேச்சின் விளக்கம் எனக்குக் கிடைத்து விடுகிறது. 

- நன்றி. தோழர். பேமஸ் உமா.



இந்தியாவின் ஒரே மொழி இந்தி என்ற #அமித் ஷா'வின் கருத்துக்கு ss
:தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் பதிலடி: 

இன்று இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண் டும் என பதிவிட்டுள்ளார். அதில் நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றும் ஒரேமொழியாக இந்திஇந்திo  இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் அடையாளப்படுத்த முடியும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். 

அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும்படி செய்தியாளர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களிடம் கேள்வி எழுப்பினர், அதற்கு தலைவர் அளித்த தகுந்த பதிலடி பதில் பின்வருமாறு... 

அமித்ஷா தற்போது கூறியிருப்பது புதிய கருத்தல்ல. அது அவர்களது நீண்ட கால கனவுதிட்டம். ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்பின் செயல்திட்டத்தை ஒவ்வொன்றாக செயல்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் ஒரே தேசம் ஒரே கலாச்சாரம் என்பது. 

இதனை நடைமுறைப்படுத்தும் அளவிற்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் சர்வாதி
கார முறையில் முடிவெடுத்து கருத்து தெரிவிக்கிறார்கள். இது இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வகையில் உள்ளது. இதனை அனுமதித்தால் இந்தியா மேலும் சில சிக்கலை சந்திக்க நேரிடுமே தவிர இந்தியாவை ஒருங்கிணைக்க முடியாது. 

இந்தியாவை இந்து தேசமாக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமே தவிர, இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டும் என்பது பாரதிய ஜனதா ஆட்சியின் நோக்கமல்ல என தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தெரிவித்தார். 

தலைவரின் பேட்டி பதிவு... கடலூர் ம_சுரேஷ்_ பாபு மாவட்ட 
அமைப்பாளர், ஆவண மையம்.



சொற்களுக்குள் ஆயதமிழ் சுழல்கலை வெண்பா U
.கற்களுக்குள் நோண்டுக் காணலாம்ஊ மைச்சிலை
நெற்பதரே ஒரேநாடு ஆகம...தூ ச(க)தியில்/கு
தர்க்கமே  இந்திவினாk இரா(ம)ன் கனாதிராவி
டனுக்குஎ.l
தற்கு? வந்தேறி கிருதமதம் சீழ்திணிப்பு... பிதுக்கு

மண்ணுள் தமிழும் மகிழும் சமுத்திரமாய்
விண்ணுள்உலா வித்/துயர் வென்ற சசரித்திரம
எம்முள் உயர்ந்த இமய மலைச்சிகரம்
அம்பேத்கார்; எவ்வழியாய் ஆகாய மார்கன்நீ
பெண்ணாய்கைப் பற்ற பிறந்த கதைஊழல்
!வந்தேறி வாய்வெண்ணெய் பொய்தீய.



அன்பில் தமிழா கடல்அயோ டின்தலித்(ஆ)கி 
ஒன்ற திராவிடமாய் ஆளும் உரிமைக்காண் .
வம்புச்செய் இந்திபொய்யன்  வந்தேறி சீழ்மதத்தை...
பண்தமிழே* பாடிகிழி வாழ்வாய்.

*பாட்டுத் தமி(ழே)!

Comments

Popular posts from this blog

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதலிடம் https://m.facebook.com/story.php?story_fbid=1845151198946994&id=100003563968512&notif_t=feedback_reaction_generic&notif_id=1547449544020433&ref=m_notif https://m.facebook.com/story.php?story_fbid=1844938805634900&id=100003563968512&_ rdr Mokhtar Nekrouf Expressive words/Mots expressifs   12m இன்று ஜனவரி  15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்.... கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடி...

தசரதனுக்கு பிறக்காதவனுக்கு சிலை எதற்கு?

ᘻ 2 ᖽᐸ   @ Mark 2kali 4h 😍😍😍😍👌  pic.twitter.com/iyHLAdUYYD https://m.facebook.com/story.php?mstory_fbid=1788201254641989&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 Replying to  @Narayanan3 அந்த ஒருநாள் பேச்சியில, #bjp  க்கு இன்றைக்குவரையிலும் தூக்கம் வரல போல,உண்மையை சொன்னா அப்படிதான் சார் கசக்கும் பொருத்துகொள்ளுங்கள்!!  pic.twitter.com/Amhxl9OVz7 12:14 AM - 15 Dec 2017 Twitter By:   மௌவுரியன்   @Mouriyan1990 சாதி ஒழிய சேரிதிறலும்-அன்று.., தலைகீழா நாடு  புறலும்!! என்ற அண்ணனின் முழக்கங்ளோடு  எனது முதல் ட்வீட் தோழர்களே!! pic.twiter.com/ bpdAbZAp3u    5:59 PM - 13 Dec 2017 அடக்குமுறைகளை எதிர்க்கும் வீரியமிக்க அண்ணன். https://m.facebook.com/story.php?story_fbid=1821788567949924&id=100003563968512&_rdr மௌவுரியன் @ Mouriyan1990 சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!!  pic.twitter.com/MgeJ5Ei8oP 8:17 AM - 15 Dec 2017 ...