Skip to main content

பெரியாறு அணைகட்ட சொத்தை விற்ற ஆங்கிலேயர் ஜான்_பென்னிகுவிக்!

கூலி தொழிலாளி மகள் நீதிபதி தேர்வில்
தமிழகத்தில் முதலிடம்

Photo

இன்று ஜனவரி 15 ,1841 தமிழ்நாட்டின் தென்பகுதி மாவட்டங்களில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவ கங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயத்திற்கும், குடிநீர்த் தேவைகளுக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் #ஜான்_பென்னிகுவிக் (John Pennycuick) அவர்களின் பிறந்த தினம்....

கலோனல் ஜான் பென்னிகுவிக் சி. எஸ். ஐ பிறப்பு 15 சனவரி 1841 இறப்பு 9 மார்ச் 1911, புதைத்தது 11 மார்ச் 1911 பிரிம்லி, சரே மாவட்டம் கல்லறை பிரிம்லி, சரே தேசியம் பிரித்தானியர் குடியுரிமை இங்கிலாந்து கல்வி செல்தன்காம் கல்லூரி, எச். இ. ஐ. சி. இராணுவக் கல்லூரி, அடிச்கோம்ப் பெற்றோர் பிரிகேடியர் ஜெனரல் ஜான் வாழ்க்கைத்துணை கிரேஸ் ஜார்ஜியானா சாமியர்
பிள்ளைகள் 5 மகள்கள், 1 மகன் # சென்னை அரசுப் பொறியாளர்..

ஜான் பென்னி குவிக் சென்னை அரசின் பொதுப் பணித்துறைப் பொறியாளர் மற்றும் செயலாளராக
1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்றிலிருந்து நியமிக்கப்பட்ட செய்தி இலண்டன் அரசுப் பதிவிதழில் (தி இலண்டன் கெசட்) வெளியிடப்பட்டது. இதன்படி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்குப் பணிக்கு வந்தார்.

#அணை கட்ட சொத்தை விற்றவர்.. இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், பெரியாறு அணை கட்டப்படுவதற்கு முன், சென்னை மாகாணத்தில், வைகை வடிநிலப்பரப்பில் பல முறை மழை பொய்த்து மிகுந்த உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை கண்ட பென்னிகுவிக் மிகவும் வருத்தம் அடைந் தார். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார்.

இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின.

ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலை மையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு இன்னல்களுடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையி னால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.

அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்த மாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். [4][5] இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.

#வறுமையில் வாழ்ந்த பென்னிகுக் குடும்பம்.... பிரிட்டனில் பெரும் செல்வந்தர்கள் மட்டுமே வாழும் பகுதியில், சகல வசதியுடன் மாளிகைகளில் வாழ்ந்த பென்னிகுக்கின் குடும்பம், முல்லைப் பெரியாறு அணைக்காக செய்த பொருட்செலவுகளால், கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாயினர்.

இதனால் மாளிகையில் வாழ்ந்த அவர்கள் கடைசியில் அரசாங்கம் அளித்த தொகுப்பு வீடுகளில் குடியேறி வாழ்ந்துள்ளனர். பென்னிகுவிக் 1911ல் காலமான போது, அவருடைய ஐந்து மகள்களின் மூத்த மகளுக்கு வயது 30. அவருடைய ஒரே மகனுக்கு வயது 11. ஏழ்மை நிலையில் சுற்றத்தார் யாரும் உதவாததால் அவருடைய மூன்று மகள்களுக்கு திருமணமாகாமல், வாரிசுகள் இல்லாமலே காலமானார்கள்.

ஒரு மகள் ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்து ஜெர்மானியர் ஒருவரை மணந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறி னார். அவருடைய ஒரே மகன் ஜான் பென்னிகுவிக் (ஜூனியர்) பிரிட்டனின் உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக பணியாற்றினார்.

#பென்னிகுக்கிடம் ஆலோசனை கேட்ட ஆஸ்திரேலிய அரசு... வெற்றிகரமாக பெரியாறு அணை கட்டி முடித்த பென்னிகுக்கிற்கு சென்னை மாகான பொதுப்பணித் துறை செயலாளராக பதவி உயர்வு கொடுத்து அழகு செய்தது ஆங்கிலேய அரசு.

தொடர்ந்து சிறிது காலம் ஹூப்பர்ஹில்& இல் உள்ள ராயல் இந்திய பொறியியல் கல்லூரியின் கடைசி தலைவராகவும், சென்னை பல்கலைக் கழகத்தின் ஆசிரியராகவும் இருந்தார். 1898&ல் சென்னை சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சுகாதார வாரிய தலைவராக பதவி வகித்தார். 1899 ஆம்ஆண்டு, பிரிஸ்பேன் நதியின் வெள்ளப் பெருக்கில் ஏற்படும் சேதத்தை தவிர்க்க ஆஸ்திரேலிய அரசு பென்னிகுக் கிடம் ஆலோசனை கேட்டது.

#பென்னிகுவிக் நினைவு.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கர்னல் ஜே பென்னிகுவிக் பெயரில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு. தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவ சாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுவிக் படம் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் சுருளிப்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுவிக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.

#மணி மண்டபம்.. முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுக் நினைவைப் போற்றும் வகையில் தேனி மாவட்டம், கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் 2500 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.1.25 கோடி செலவில் வெண்கலத்திலான பென்னிகுவிக் உருவச் சிலையுடனான மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது..

இந்த மணிமண்டபத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா ஜனவரி 15, 2013 அன்று திறந்து வைத்தார்.

See Picture:
10&id=100010981512048
Public

27m
Photo

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்குள்நீ ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர்வேன் !

பழுத்த நேசம் அழுக... பாசம்வி ளாசும்;
இழுத்த உரோசம் இயலாமை... ஏசும்;
உளுத்த கோசம்... கேசம் பேசும் விரசம்;
புழுத்த பொய்பக்தி ஓதல் நம்ப... கூசும்;
வளர்த்த சிறுமை... வறுமையை உரசும்;
அழுத்த பொறுமையை... தேசம் நாசம்!

எழுகமத ஊணமே! இன்றும்வந் தேறி...
ஒழுகசாதி பொய்யுள் உலவல்ஏன் சூத்ர?
பழமைதீது பேததீட்டு பாவம் கழுவு;
நிலவும், தினகரன்போல் நிதமும் மலரும்;
உலகம்நீ ஆள்நான் விடிவேன்!

-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்வாதாரமும் தனி ஒருவனுடைய...
What about beautiful views 🧚‍♀️
Photo

Comments

Popular posts from this blog

திராவிடர் அனல் சுடர் > s3Lvi_comrade @Selvi_comrade [Twitter] பக்கம்.

மௌவுரியன்   @ Sanru26446130 21h சாதி ஆதிக்கம் தளர்ந்தது!! பெண்ணியம் மலர்ந்தது!!! pic.twitter.com/MgeJ5Ei8oP Twitter By:   Marina🏄   @Mark2kali Click Links and view: கெளசல்யா/DNAS அணி > சாதிகள் ஒழிப்பு  பாசறை... சுழற்சி [1] திராவிடர் அனல் > செய்தி சுடர் > MAHARAJA® @MAHARAJA_2020 [TWITTER] பக்கம்! கெளசல்யா/DNAs அணி > தின அனல் NEWS > Mrs.Spy@Masha [TWITTER] பக்கம்! 5:05 Udumalai Pettai Shankar murder DEVAR FM 77,720 views உடுமலைப்பேட்டை சங்கர் கொலை பற்றி விளக்கமளித்த பேச்சிமுத்து . s3Lvi_comrade   @ Selvi_comrade Aug 28 இதையே அடுத்த மதத்துகாரன் செய்திருந்தால் அதை வச்சு பெரிய கலவரமே செய்திருப்பார்கள் . எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.  pic.twitter.com/gDfF L74AJB 4:04 Song on Periyar by Bheem Drum; Periyar birthday Osmania News 611 views పెరియార్ పెరియార్ పెరియారూ.. నువ్వు మనువాదుల గుండెల్లో రివాల్వరు. மனித கழுத்து சிறிய​தே! கரிதல...

Reach and learn more.

KRS | கரச @kryes: Radhakrishnan as Advocate of the Caste System!  இவனா உங்கள் 'ஆசிரியன்'? View and learn [ LABELS]:   இ.அ.சாசனம்அடிப்படையில் சட்டமாக இவை இயங்கிட வேண்டும். Twitter By:   KRS | கரச   @kryes ஆசிரியர் நாள் வாழ்த்துக்கள்! ஆனால் இவரை வைத்து, ஆசிரியர் நாள் கொண்டாடாதீர்கள்! வாசித்து, அறியத் துவங்குங்கள்! சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்= அந்நாள் சங்கி! *Caste is Hindu Creative Innovation என்பவனா ஆசிரியன்? *Caste is Spiritual Realization என்பவனா ஆசிரியன்? இவரா ஆசிரியர்? ச்சீ! pic.twitter.com/48CuM1pKDc 9:02 PM - 4 Sep 2018 KRS | கரச @ kryes Replying to  @kryes Radhakrishnan as Advocate of the Caste System! இவனா உங்கள் 'ஆசிரியன்'? *காஞ்சி மஹா பெரியவா= எளிமையானவர் எ. கட்டமைப்பில் மயங்குவது போல் *ராதாகிருஷ்ணன்= தத்துவ ஞானி/ ஆசிரியன் எ. கட்டமைப்பில் மயங்குகிறீர்களா? வாசிக்க!  jstor.org/stable/2010647…   pic.twitter.com/WKDcqJ9jgU 9:21 PM - 4 Sep 2018 Twitter By:   KRS | கரச   @...