@devamax5 | |||||||||
பின்வரும் தொடரில் காணும் கதையாக அல்லாமல் நிகழ்வுகள் உண்மையாக நடந்திருக்கும் பட்சத்தில் தமிழ் சித்தர்களில் முதன்மையானவராக அகத்தியர் இருந்திருக்க கூடும். கைபர்போலன் கணவாயன்களை (ஆரியர்களை) பிற்காலத்தில் நேர்மை உத்தமர்களாய் போலியாய் நடப்பில் பிரபலமாகிட... அந்தப்படிக்கு தென் திசை தமிழ் மக்களை நடை முறைகளில் ஏமாற்ற வடக்கிலிருந்து தெற்கு நோக்கி (குமரி முனைக்கு) முப்பத்து முக்கோடி தேவர்களின் வாழ்வாதாரத்திற்காக (உலக மானுட நலனுக்காகவும்)... வடக்கே மேருமலை (இமயமலை/கைலாசம்) கடல் மட்டத்திற்கு மேல் தோன்றவும்... தெற்கே அந்தப்படிக்கு குமரி முனை தாழவும்... இந்திய துணைக்கண்டம் சமநிலையை அடையவும் நடைப்பயணம் மேற்கொண்டாராம் என்று அகத்தியர் புராணத்தை ஆரியன் கதை படுத்தினான். அதனால் வடக்கே இமயமலை மேலெழ இந்திய துணைக் கண்டம் சமநிலப் பரப்புடையதாக ஆக... தெற்கே குமரிமுனைக்கு அப்பால் லெமூரியா கண்டம் கடலுள் மூழ்கிட்டதாகவும் (கற்பனை) இயற்கையை இருட்டடிப்பு செய்திட்டான். ஏழு மலையான் என்று பிரபலமாகி நடப்பில் கற்பனைக்கு வெங்கடாசலபதி இருந்திடுவது போல் அகத்தியர் காலத்தில் விந்திய மலையான் என்ற பெயர் புகலுற்றிருந்ததாம் விந்திய (விண் தீண்டிய) மலையான் அகத்தியரின் சீடனாம் தெரிய வருகிறது. (சூரியன் தாண்டி செல்ல இயலாதவாறு) விந்திய மலையனின் வளர்ச்சி உச்சம் இதுதான் என்று முடிவு இறுதி செய்யப்படா திருந்த நிலையில் விந்திய மாமலையனின்... குரு அகத்தியர் என்பதால் இந்திய பிரதமர் மோடியை போன்றே மிகுந்த அளவில் தற்பெருமை கொண்டிருந்தான். அகத்தியர் மூலிகைசித்தர் தமிழ் மாமுனிவர்களில் முதல்வர் என்கிறார்கள்; விந்திய மலையனின் குரு அகத்தியர் என்பதால் குரு ஆணையை ஏற்று சீடன் வளர்ந்து உயர்ந்து வான்முட்டிட்ட தன் உடலை அகத்தியருக்காக வளைய செய்து தென்திசை (குமரிமுனை) நோக்கி செல்லும் படிக்கு வழிவிட்டானாம். அகத்தியர், சீடன் விந்திய மலையிடம் விடைபெற்று தென்னாடு களின் எல்லைகளை கடந்திடும் முன்பாக நான் திரும்பி வருவேன் மீண்டும் வடநாடு செல்வேன்.அதுவரை இப்படியே நிமிராதிரு; மேற்கொண்டு நீ உயர வளராமல் பார்த்துக்கொள் என்று ஆணை பிறப்பித்து சென்றானாம். ஆனால் அவ்வாறு உத்தரவிட்டு சென்ற அகத்தியர் வட நாடு திரும்பா மல் தமிழ் மண்ணில் நிரந்திரமாக குடும்பத்துடன் தங்கிவிட்டானாம் அகத்தியர் திரும்பாதத்தால் சீடன் விந்திய மலையான் முதுகை நிமிர்த்தி கொள்ளவில்லையாம் மேற்கொண்டு உயர வளரவில்லை யாம் குனிந்திட்டது குனிந்தவாறே இடம்பெயராமல் இருந்து வருகி றானாம். அதனால் சுதந்திரம் பெற்ற சூரியன் தினசரி விந்திய மலையை தாண்டி மேருமலையை சுற்றிவர முடிகிறதாம். ஆனால் தென்னாடு வந்த அகத்தியர் தனியே வரவில்லை மனைவி குழந்தைகள் மற்றும் பயன்படுத்திய பொருள்கள் அடங்கிய மூட்டை முடிச்சுக்கள் ஆக குடும்ப சகிதமாக வந்துற்றான். இதனால் அகத்தியர் வட இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுத் தமிழ் மண்ணில் அடைக்கலமாகினது குடும்ப சகிதமும் என்பதால் அப்படி வந்துற்றபின் வட இந்தியா திரும்ப செல்லவில்லை என்பதும் அகத்தியர் வந்தேறி பார்பனர்களிடையே மரியாதைக்குரியவராக வாழ்ந்திடவில்லை ஆதிதமிழ் அகதி என்பதானது உறுதி ஆகின்றது. நந்தன் பேரரசு நாகர் மாமன்னன் எரிப்பு மற்றும் அரசி நந்தி சிலை ஆகின முடிவு அன்ன; அகத்தியர் அகதியாகவே தமிழ்மண்ணில் அடைக்கலம் புகுந்தான் என்பதானது இருட்டடிப்பு ஆகிடும் படிக்கு... வந்தேறி பார்ப்பனர்களால் சிதம்பர ரகசியம் ஆக்கப்பட்டு விட்டது. தேவேந்திர அரசன் இந்திரன் வேண்ட... ஏற்றுஅகத்தியர் வடக்கி லிருந்து நடைப்பயணம் செய்திட சிவன் அனுமதித்தானாம் கண்ணன் ஆசிர்வதித்தானம். இது ஒரு வகையில் தென்னகத்தை வேவு பார்த்திட்ட நடைமுறை தந்திரமும் ஆகிற்று. இந்திய துணைக் கண்டம் முழுவதும் ஆதி பூர்வீக தமிழ் குடிமக்களே வாழ்ந்திட்டனர் என்கிற வரலாற்று ஆதாரத்திற்கு அகத்தியர் புராண புனைவு மூலம் ஆரியன் இந்திய வந்தேறிட்ட நாளிலேயே உடன்நிகழ்வாக முற்றுப்புள்ளி வைத்திட்டான். அகத்தியர் வட இந்தியாவிலிருந்து தமிழ் மண்ணில் அடைக்கலமாகின
காலத்தில் ஏக இந்தியாவும் தமிழனுக்கே சொந்தம் எனும்படிக்கு
வரலாறு (பாண்டிய மாமன்னன் நெடியோன் ஆட்சிக் காலம்) இருந்துற்றது.
நெடியோன் பாண்டிய மாமன்னன் ஆட்சிக்கு பின்னர் தமிழர்களை விந்திய
மலை தொடரை தாண்டி தெற்கே பயணிக்கும் படிக்கு வந்தேறிகள் ஆட்சி
சூழலை கெடுத்திட்டனர். (இதற்கு நிர்மலாதேவி அன்ன... ஆசிரம பார்பன
பெண்கள் காரணமாகியிருக்கக் கூடும்)
ஆசிஃபா வின் உடல் அந்த ஊரில் புதைக்க அவர்கள் விடவில்லை.
இன்னொரு கிராமத்தில்தான் அவள் புதைக்கப்பட்டுள்ளாள். அவளுடைய
குடும்பம் இன்று இமாலய மலைச் சரிவுகளில் எங்கோ மறைந்து விட்டது.
-- Natrajan Vishwanath🍃 @viswarajantweet
அந்தபடிக்கு குழந்தை ஆசிஃபாவுக்கு ஏற்பட்ட கொடுமை நிகழ்வுப்படியோ
அல்லது வேறுவிதமாக கொடூரங்களோ ஆரியர்கள் உண்டாக்கி வட
மாநிலங்களில் குடியிருப்புக்களை காலிசெய்து தமிழர்களை ஓடிட
செய்திருக்க வேண்டும்.
வட மாநிலங்களிலிருந்து தமிழர்களை (அப்போது தமிழில் மொழி கிளைகள் இல்லை; திராவிடர் அனைவரும் தமிழரே)விரட்டப்பட முன்னேற்படாக...
பலவீனமான ஆளுகையாளர்களின் மனங்களில் ஆதிக்கம செலுத்த
ஆலயநிர்வாக பொறுப்புக்களை ஆரியர்கள் நூறு சதவீதமும் தம்முடைய
தாக்கிக் கொண்டனர்.
ஆலய பூசாரிகளாக இருந்த தமிழர்களை விந்தியமலை தொடரை தாண்டி
தெற்கே பயணிக்கும் படிக்கு விரட்டிட்டனர். கோயில்களில் தமிழ் பூசாரி
களாய் இருந்தவர்கள் காடுகளில் சுற்றி (ஒளிந்து) திரிந்து சித்தர்கள் ஆகினர்.
அந்தபடிக்கு திராவிட மொழிகளாக தமிழ் ஆகினது போல் நிலமும் தெற்கே
ஐந்தாக உடைந்திட்டது இதற்கு சூத்திர இந்துத்துவ மதம் ஆரியர்களுக்கு
உதவியிருக்கின்றது.
பாண்டிய மாமன்னன் நெடியோன் காலத்தில்... தமிழர்கள் ( நாகர்... ஒரே
இனன்டா!) இந்தியா (மொழிபிளவு ஏதுமில்லை) ஒரே நாடுடா! குப்தர்கள்
காலத்தில் திராவிடர்கள்... ஐந்து பிரிவுடா! இன்று சாதிகளில் பைத்தியம்
பிடித்த 'மான'... தமிழன்டா! நாளை... தமிழர்களாக இருப்போமா?
|
| @devamax5 | |||||||
@devamax5 | ||
காவிரி - என்ன பிரச்சினை? எது உண்மை.. ஒரு சாமானியனின்
பார்வை.. -- By ரா புவன்
Comments
Post a Comment